படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தென்கிழக்குப் பல்கலை!

0 406

தென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனைக்கு  உள்ளாக்கப்பட்டுள்ளது.

இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து இன்று (29)  மாலை அம்பாறை மாவட்டம் ஒலிவில் பகுதியில் அமைந்துள்ள  தென்கிழக்கு பல்கலைகழக  மாணவர் விடுதி   அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள்  அனைத்தும்  சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நூற்றுக்கணக்கான படையினர் இத்தேடுதலில் பங்கேற்றதுடன் கனகர வாகனங்களும் பல்கலைகழக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படடன.

மேலும்  ஒலுவிலின் பல்வேறு பகுதிகளிலும்   தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!