தேசிய தெளஹீத் ஜமாஅத் குளியாப்பிட்டி அமைப்பாளரும் கைது!

0 297

                                                                                                                                    (எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் குளியாப்பிட்டி பிரதேச அமைப்பாளரை  இன்று (29)  மேல் மாகாண உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.  தும்மலசூரிய பொலிஸாருடன் இணைந்து எத்துன்கஹகொட்டுவ பகுதியில் வைத்தே அவரைக் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

 மேல் மாகாண உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!