டஸ்ல்டோர்வ் மரதனில் ஹிருணிக்கு வெள்ளி

உலக மெய்வல்லுநர் போட்டிகளிலும் பங்குபற்ற தகுதி

0 154

ஜேர்­ம­னியில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற டஸ்ல்டோர்வ் மரதன் ஓட்டப் போட்­டியில் பங்­கு­பற்­றிய ஐக்­கிய அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும் இலங்கை வீராங்­கனை ஹிருணி விஜ­ய­ரத்ன புதிய தேசிய சாத­னை­யுடன் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்­கத்தை வென்றார்.

இதன் மூலம் கத்­தாரில் இவ் வருடம் நடை­பெ­ற­வுள்ள மெய்­வல்­லநர் சம்­மே­ள­னங்­களின் சர்­வ­தேச சங்­கத்தின் உலக மெய்­வல்­லுநர் போட்­டியில் பங்­கு­பற்றும் தகு­தியை ஹிருணி பெற்­றுள்ளார்.

டஸ்ல்டோர்வ் மரதன் ஓட்டப் போட்­டியை 2 மணித்­தி­யா­லங்கள், 34 நிமி­டங்கள் 10 செக்­கன்­களில் நிறைவு செய்­ததன் மூலம் ஒரு வரு­டத்­துக்கு முன்னர் நிலை­நாட்­டப்­பட்ட (2 மணி. 36 நி. 35 செக்.) தனது சொந்த தேசிய சாத­னையை ஹிருணி முறி­ய­டித்து புதிய தேசிய சாத­னையை நிலை­நாட்­டினார்.

இதன் மூலம் உலக மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்கு தேவைப்­பட்ட அடைவு மட்­டத்­தையும் ஹிருணி எட்­டினார்.

மேலும் இந்­திய வீராங்­கனை ஓ. பி. ஜய்­ஷா­வினால் 2015 உலக மெய்­வல்­லநர் போட்­டி­களில் நிலை­நாட்­டப்­பட்ட தெற்­கா­சிய சாத­னையை (2 மணி. 31 நி. 10 செக்­கன்கள்) 2 நிமி­டங்கள், 25 செக்­கன்­களால் ஹிருணி புதுப்­பித்தார்.

கடைசி பத்து கிலோ மீற்­றர்­களில் தன்னால் ஓட முடி­யாமல் இரந்­த­தா­கவும் இதனை போட்­டியைக் கைவிட எண்­ணி­ய­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

ஆனால் ஒரு வாரத்­துக்கு முன்னர் இலங்­கையில் இடம்­பெற்ற துயர் சம்­ப­வங்கள் மனதில் எழுந்­ததால் மரதன் ஓட்­டத்தை எப்­ப­டி­யா­வது நிறை­வு­செய்­ய­வேண்டும் என உறு­தி­பூண்­ட­தா­கவும் அதுவே தனது வெற்­றிக்கு கார­ண­மாக அமைந்­த­தா­கவும் ஊடகம் ஒன்றுக்கு அவர் கூறியுள்ளார். டஸ்ல்டோர்வ் மரதன் ஓட்டத்தில் சுமார் 20,000 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!