மரதனில் 2ஆவது அதிவேக நேரப் பெறுதியுடன் லண்டன் மரதனில் வெற்றிபெற்றார் கிப்சோகே

பெண்கள் பிரிவில் ப்றிஜிட் கொஸ்கேய் வெற்றி

0 124

இங்­கி­லாந்தில் ஞாயி­றன்று நடை­பெற்ற 38ஆவது லண்டன் மரதன் ஓட்டப் போட்­டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிர­தான பிரி­வு­க­ளிலும் கென்னி­யர்கள் வெற்­றி­யீட்­டினர்.

ஆண்கள் பிரிவில் முன்­னணி (எலைட்) வீரர்­க­ளுக்­கான மரதன் ஓட்டப் போட்­டியை 2 மணித்­தி­யா­லங்கள், 02.37 செக்­கன்­களில் நிறை­வு­செய்த கென்­யாவின் எலியுத் கிப்­சோகே முதலாம் இடத்தைப் பெற்றார். அத்­துடன் உலக மரதன் ஓட்டப் போட்டி வர­லாற்றில் இரண்­டா­வது அதி­வேக நேரப் பெறு­தியைப் பதிவு செய்த அவர், லண்டன் மர­தனில் வென்ற நான்­கா­வது சம்­பியன் பட்டம் இது­வாகும்.

அத்­துடன் லண்டன் மரதன் ஓட்டப் போட்­டிக்­கான புதிய சாத­னை­யையும் அவர் நிலை­நாட்­டினார்.பேர்­லினில் கடந்த வருடம் செப்­டெம்பர் 16ஆம் திகதி நடை­பெற்ற மரதன் ஓட்டப் போட்­டியில் உலக சாதனை (2 நி. 01.39 செக்.) நிலை­நாட்­டிய கிப்­சோகே பதிவு செய்த இரண்­டா­வது அதி­வேக நேரப் பெறுதி இது­வாகும்.

கிப்­சோ­கே­வுக்கு, இவ் வருட லண்டன் மரதன் ஓட்டப் போட்­டியில் எதி­யோப்­பியர் சவால் விடுத்த போதிலும் 0.22 செக்­கன்கள் வித்­தி­யா­சத்தில் கிப்­சோகே வெற்­றி­பெற்றார்.

எதி­யோப்­பி­யாவின் மோசினெட் ஜெரே­மியு (2 நி. 02.55 செக்.) இரண்டாம் இடத்­தையும் மியூல் வசிஹுன் (2 நி. 03.16 செக்.) மூன்றாம் இடத்­தையும் பெற்­றனர்.

பெண்கள் பிரிவில் முன்­னனி வீராங்­க­னை­க­ளுக்­கான மரதன் ஓட்டப் போட்­டியில் கென்­யாவின் 25 வய­தான ப்றிஜிட் கொஸ்கேய் வெற்­றி­யீட்­டினார்.

இப் போட்­டியை 2 நிமி­டங்கள், 18.20 செக்­கன்­களில் நிறைவு செய்த ப்றிஜிட், லண்டன் மரதன் ஓட்டப் போட்டி வர­லாற்றில் பெண்­களில் மிகக் குறைந்த வயதில் வெற்­றி­பெற்­றவர் என்ற பெரு­மைக்­கு­ரி­ய­வ­ரானார். இப் பிரிவில் 35 வய­தான கென்ய வீராங்­கனை விவியன் செருயொட் (2 நி. 20.14 செக்.) இரண்டாம் இடத்­தையும் எதி­யோப்­பி­யாவின் ரோசா டிரேஜே (2 நி. 20.51 செக்.) மூன்றாம் இடத்­தையும் பெற்­றனர்.

லண்டன் மரதன் ஓட்டப் போட்­டியில் இவ் வருடம் 40,000க்கும் மேற்­பட்­ட­வர்கள் பங்­கு­பற்­றி­ய­துடன் இப் போட்டி மூலம் ஒரு பில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட ஸ்டேர்லிங் பவுண்ட்கள் காருண்ய நிதிக்­காக திரட்­டப்­பட்­டது. இதே­வேளை, ஆண்­க­ளுக்­கான சக்­கர இருக்கை மரதன் போட்­டியில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் டெனியல் ரோமன்சுக் (1 மணி. 33.38 செக்.), பெண்­க­ளுக்­கான சக்கர இருக்கை மரதன் போட்டியில் சுவிட்சர்லாந்தின் மெனுவேலா ஷ்கார் (1 நி. 44.09 செக்) ஆகியோர் முதலாம் இடங்களைப் பெற்றனர். (என்.வீ.ஏ.)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!