போர்ஷே டென்னிஸ் க்ரோன் ப்றீயில் பெட்ரா கிவிட்டோவா சம்பியன்

0 172

மகளிர் டென்னிஸ் சங்கப் போட்­டி­களில் இவ் வருடம் இரண்டு சம்­பியன் பட்­டங்­களை வென்ற முத­லா­வது வீராங்­கனை என்ற பெரு­மையை போர்ஷே டென்னிஸ் க்ரோன் ப்றீ போட்­டியில் வெற்­றி­பெற்­றதன் மூலம் பெட்ரா கிவிட்­டோவா பெற்­றுக்­கொண்டார்.

ஜேர்­ம­னியின் ஸ்டுட்­கார்ட்டில் ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் எஸ்­டோ­னியா வீராங்­கனை எனட் கொன்­டா­வெய்ட்டை இரண்டு நேர் செட்­களில் (6 – 3, 7 – 6) செக் குடி­ய­ரசைச் சேர்ந்த 29 வய­தான பெட்ரா கிவிட்­டோவா வெற்­றி­கொண்டு சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்தார்.

பெட்ரா கிவிட்­டோவா சம்­பி­னா­ன­தற்கு முன்னர் நடை­பெற்ற 18 மகளிர் டென்னிஸ் சங்க சுற்றுப் பயண போட்­டி­களில் மாறு­பட்ட வீராங்­க­னை­களே சம்­பி­ய­னா­கி­யி­ருந்­தனர்.

பெட்ரா கிவிட்­டோவா இதற்கு முன்னர் சிட்னி சர்­வ­தேச டென்னிஸ் போட்­டியில் சம்­பி­ய­னா­கி­யி­ருந்தார். ஆனால் அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாக்காவிடம் கிவிட்டோவா தோல்வி அடைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!