உலக மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் கிவிட்டோவா 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்

0 200

உலக மகளிர் டென்னிஸ் ஒற்­றையர் தர­வ­ரி­சையில் செக் குடி­ய­ரசு வீராங்­கனை பெட்ரா கிவிட்­டோவா இரண்டாம் இடத்­துக்கு முன்­னே­றி­யுள்ளார்.

(போர்ஷே க்ரோன் ப்றீ டென்னிஸ் தொடரில் சம்­பி­ய­னா­கி­ய­மைக்­காக பரி­சாக வழங்­கப்­பட்ட போர்ஷே காருக்கு முன்னால் போர்ஷே நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி ஒலிவர் ப்ளமுடன் பெட்ரா கிவிட்டோவா)

 

ஜேர்­ம­னியின் ஸ்டுட்­கார்ட்டில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற போர்ஷே க்ரோன் ப்றீ டென்னிஸ் இறுதிப் போட்­டியில் எஸ்­டோ­னி­யாவின் எனட் கொன்­டா­வெட்டை வெற்­றி­கொண்டு சம்­பி­ய­னா­னதன் மூலம் கிவிட்­டோவா தர­வ­ரி­சையில் ஓரிடம் முன்­னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்­துள்ளார்.

அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் இவ் வருடம் முதல் தட­வை­யாக சம்­பி­ய­னான ஜப்பான் வீராங்­கனை நயோமி ஒசாகா தொடர்ந்தும் முத­லி­டத்தில் உள்ளார். ருமே­னி­யாவின் சிமோனா ஹாலெப் ஓரிடம் பின்­ன­டைவு கண்டு மூன்றாம் இடத்­துக்கு தள்­ளப்­பட்­டுள்ளார்.

ஜேர்­ம­னியின் ஏஞ்­சலிக் கேர்பர் ஓரிடம் முன்­னேறி நான்காம் இடத்தைப் பிடித்­துள்­ள­துடன் செக் குடி­ய­ரசின் கரோ­லினா ப்ளிஸ்­கோவா ஐந்தாம் இடத்­துக்கு பின்­தள்­ளப்­பட்­டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!