தனது மெய்ப்பாதுகாவலரை திடீர் திருமணம் செய்தார் தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்ன்

0 1,015

தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன், தனது மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவரின் முடிசூட்டு விழா சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இத்திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது.

சுதிதா திட்ஜாய் என்பவரையே மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் திருமணம் செய்துகொண்டுள்ளார். மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மெய்ப்பாதுகாவல் படையின் உப தலைவராக சுதிஜா திட்ஜால் பதவி வகித்து வந்தார்.

முன்னாள் விமானப் பணிப்பெண்ணான சுதிதாவை தாய்லாந்து இராணுவத்தின் ஜெனரல் தர அதிகாரியாக மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன், 2016 ஆம் ஆண்டு தரமுயர்த்தினார். 2017 ஆம் ஆண்டு தனது மெய்ப்பாதுகாவல் படையின் உப தலைவராகவும் சுதிதாவை அவர் நியமித்தார்.

தாய்லாந்தின் மன்னராக விளங்கிய பூமிபோல் 2016 ஆம் ஆண்டு காலமானதையடுத்து, அவரின் புதல்வர் மஹா வஜிரலோங்கோர்ன் அரசியலமைப்பு ரீதியாக மன்னரானார். ஆவரின் உத்தியோகபூர்வ முடிசூட்டுவிழா நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

66 வயதான மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் ஏற்கெனவே 3 தடவைகள் திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர். அவருக்கு 7 பிள்ளைகள் உள்ளனர்.

சுதிதா திட்ஜாயை மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் திருமணம் செய்தமை குறித்த திடீர் அறிவிப்பு தாய்லாந்து அரச வர்த்தமானியில் வெளியாகியுள்ளது.

அரச பாரம்பரிய முறைப்படி இத்திருமண வைபவம் நடைபெற்றதாகவும், சுதிதா திட்ஜாய்க்கு ‘ராணி சுதிதா’ என பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo