விஹாரதிபதி கொலை தொடர்பில் 75 வயதான நபர் கைது!

0 237

                                                                                                                                  (ஆர்.விதுஷா)
நாகொடை மாபலகம பிரிவேனாக்குப் பொறுப்பான விஹாரதிபதி குறித்த அங்கிருந்த ஒருவரால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் செவ்வாக்கிழமை இரவு 8 மணிக்கும் நேற்று புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கும் உட்பட்ட காலப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது உயிரிழந்தவர் மாபலகம வித்தியாதிலக பிரிவேனாவுக்கு பொறுப்பான விகாரதிபதியான மாபலகம குணசிறி தேரர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், பணக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இடம் பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியமையினாலேயே இவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவரை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். அதற்கமைய அவர் வத்துறம்ப பகுதியின் பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 75 வயதான லேல்வல , வத்துறம்ப பகுதியை சேர்ந்த லேல்வல குருகே குணதாச என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. கொலை தொடர்பிலான விசாரணைகளை பொலிசஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!