செங்கடலில் ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் இயந்திரங்கள் செயலிழப்பு; உதவிக்கு விரைந்தது சவூதி

0 706

ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பலொன்று, செங்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, இயந்திரங்கள் செயலிழந்ததால் நிர்க்கதியாகியுள்ளது.

சவூதி அரேபியாவின் ஜெத்தா துறைமுகத்திலிருந்து 70 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, இக்கப்பலின் உதவிக்கு சவூதி அரேபிய கரையோரக் காவல் படையினர் விரைந்தனர்.

ஹெப்பினஸ் 1 (ர்யிpiநௌள 1) எனும் இக்கப்பலின் ஊழியர்களான 24 ஈரானியர்களும் பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் மீட்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியா இன்று வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளது.

இக்கப்பலில் சுமார் 10 இலட்சம் பீப்பாய் எண்ணெய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!