தேசிய தௌஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு மே 7 வரை விளக்கமறியல்

0 242

தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹம்மத் பாரூக் மொஹம்மத் பவாஸை எதிர்வரும் 7 ஆம் திதகிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் ஸ்தாபகரான ஸஹ்ரான் ஹாஷிம், உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo