வவுனியாவில் இராணுவ சீருடைகள், சக்திமிக்க மின்சார வயர்கள் மீட்பு!

0 417

                                                                                                                      (கதீஸ்)
வவுனியா கோவிற்குளத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (02) நடத்திய தேடுதலின் போது, வீடு ஒன்றிலிருந்து 450- 750 வலுக் கொண்ட நான்கு மின்சார வயர் சுருள்கள், இராணுவத்தினரின் சீருடை, இராணுவ கையுறை , இராணுவத்தினர் அணியும் காலணிகள் டிஜிட்டல் மீற்றர் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து வவுனியா வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்வராட்சி ஆகியோரால் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!