ஷொப்பிங் சென்ரருக்குள் வேகமாக புகுந்த கார்

0 421

வேக­மாக சென்ற காரொன்று ஷொப்பிங் சென்ரர் ஒன்றுக்குள் புகுந்த சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது.

85 வய­தான சாரதி ஒருவர் செலுத்­திய இந்த மேர்­சிடிஸ் கார், கண்­ணா­டி­களை உடைத்­து­க­கொண்டு கட்­ட­டத்தின் உள்ளே புகுந்­தது.

ஹம்பர்க் நக­ரி­லுள்ள ஷொப்பிங் சென்ரர் ஒன்­றி­லேயே நேற்­று­முன்­தினம் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

மேற்­படி வர்த்­தகக் கட்­டடத் தொகு­தியின் பேச்­சாளர் ஒருவர் இது தொடர்­பாக கூறு­கையில், “வய­தான சார­தி­யொ­ருவர், கட்­ட­டத்தின் பிர­தான கத­வுக்கு ஊடாக காரை செலுத்திச் சென்று ஒரு விளிம்பில் நிறுத்­தினார்.

இன்னும் 20 அங்­கு­லங்கள் (50 சென்­ரி­மீற்றர்) தூரம் அக்கார் சென்­றி­ருந்தால் கட்­டத்­தின்கீழ் தளத்தில் கார் வீழ்ந்­தி­ருக்­கக்­கூடும்” எனத் தெரி­வித்தார்.

இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து கட்­ட­டத்­தி­லுள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!