தனது உண்மையான வயதை ஒப்புக்கொண்டார் சஹீத் அப்ரிடி: வயதை அதிகாரிகள் தவறாக குறித்து விட்டார்கள் என்கிறார்

"37 பந்துகளில் சதம் குவித்தபோது எனது வயது 16 அல்ல 19"

0 1,004

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சஹீத் அப்ரிடி, தனது வயது குறித்த நீண்டகால சந்கேத்துக்கு பதிலளித்துள்ளார்.

ஐ.சி.சியின் உத்தியோகபூர்வ பதிவுகளின்படி சஹீத் அப்ரிடியின் பிறந்த திகதி 1980 மார்ச் 01.

ஆனால், தான் 1975 ஆம் ஆண்டில் பிறந்ததாக தனது சுயசரிதையில் சஹீத்; அப்ரிடி தெரிவித்துள்ளார். தனது வயதை அதிகாரிகள் பிழையாக பதிவுசெய்துவிட்டார்கள் என தெரிவித்துள்ளார். 

1996 ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற சுற்றுப்போட்டியொன்றின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு அறிமுகமானவர் சஹீட் அப்ரிடி. கென்யாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் அப்ரிடி துடுப்பெடுத்தாடவில்லை.

அத்தொடரில் 04-10-1996 ஆம் திகதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் தான் சஹீத் அப்ரிடி முதன்முதலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் துடுப்பெடுத்தாடினார். அப்போட்டியில் 37 பந்துகளில் சதம் குவித்து சாதனை படைத்தார் அப்ரிடி.
அப்போட்டிக்கு 6 மாதங்களுக்குமுன், இலங்கை வீரர் சனத் ஜயசூரிய 48 பந்துகளில் சதம் குவித்த சாதனையை சஹீத்; அப்ரிடி முறியடித்தமை கிரிக்கெட் உலகை பரபரப்பாக்கியது.

உத்தியோகபூர்வ பதிவுகளின்படி அப்போது அப்ரிடியின் வயது 16 வருடங்கள் மற்றும் 217 நாட்கள். எனினும் அவர் 16 வயது சிறுவனைவிட வயதான தோற்றத்தில் இருந்தார். சஹீத்; அப்ரிடி உண்மையிலேயே 16 வயதானவர் தானா என பலருக்கும் சந்தேகம் எழுந்தது. நீண்டகாலமாக இது குறித்து பலரால் பேசப்பட்டது.

Crickinfo இணையத்தளத்தில் அப்ரிடியின் விபரக்குறிப்பு

இச்சந்தேகத்துக்கு தனது சுயசரிதையில் சஹீத்; அப்ரிடி பதிலளித்துள்ளார். கேம் சேஞ்சர் (Game Changer) எனும் தலைப்பிலான அப்ரிடியின் சுயசரிதை நூல் இந்தியா, பாகிஸ்தானில் இவ்வாரம் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலில், மேற்படி சாதனை குறித்து சஹீத்; அப்ரிடி தெரிவிக்கையில், “அப்போது நான் 19 வயதானவனாக இருந்தேன். அவர்கள் கூறியதைப் போல் 16 வயதானவனாக இருக்கவில்லை. நான் 1975 ஆம் ஆண்டில் நான் பிறந்தேன். எனவே, ஆம். ஆதிகாரிகள் எனது வயதை தவறாக குறிப்பிட்டு விட்டார்கள்” என எழுதியுள்ளார். பிறந்த திகதி மற்றும் மாதம் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

எனினும், இதன்படி மேலும் குழப்பங்களே ஏற்பட்டுள்ளன. சஹீத் அப்ரிடி 1975 ஆம் ஆண்டு பிறந்திருந்தால் 1996 ஒக்டோபரில் அவரின் வயது 19 அல்ல, அப்போது அவர் 20 அல்லது 21 வயதானவராக இருந்திருக்க வேண்டும்.

எவ்வாறெனினும், சஹீத் அப்ரிடி 1975 ஆம் ஆண்டு பிறந்தவரென்றால், பாகிஸ்தானுக்காக இறுதியாக 2016 இருபது20 உலக கிண்ண போட்டியில் அப்ரிடி விளையாடியபோது, அவரின் வயது முன்னர் குறிப்பிடப்பட்டதைப் போல், 36 ஆக அல்லாமல் 40 அல்லது 41 ஆக இருந்திருக்க வேண்டும். அத்துடன்; அப்ரிடியின் தற்போது வயது 44 ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo