பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்கள்:6 பேர் பலி! வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதம்

0 199

பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அழிந்துள்ளன.

இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டமைக்கு பதிலடியாக இத்தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காஸாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது, பலஸ்தீனியர் ஒருவர் மேற்கொண்டர் துப்பாக்கிப் பிரயோகத்தில் இஸ்ரேலியப் படையினர் இருவர் காயமடைந்தனர்.

அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் பலஸ்தீனியர்கள் இருவர் பலியாகினர். இத்தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியது. அதையடுத்து இஸ்ரேல் வான் வழி மற்றும் இராணுவத் தாங்கிகள் மூலம் காஸா மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன.

இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸாவில் 6 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என எனத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மோதல் ஆரம்பித்ததையடுத்து இஸ்ரேலை நோக்கி 450 ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தாம் 200 இலக்குகளைத் தாக்கியதாகவும் இஸ்ரேலியப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணியும் குழந்தையும் உயிரிழப்பு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலிலினால்இ காஸாவிலுள்ள 37 வயதான கர்ப்பிணியொருவர், அவரின் 14 மாத வயதான குழந்தைதயும் உயிரிழந்தாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

எனினும்,  இவ்விரும் தனது தாக்குதலில் உயிரிழக்கவில்லை எனவும், ஹமாஸ் ஏவிய ரொக்கெட் இலக்கு தவறு காஸாவில் வீழ்ந்ததாலேயே அவர்கள் உயிரிழந்தனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!