200 இஸ்லாமிய மதகுருமார் உட்பட 600 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்: அமைச்சர் வஜிர அபேவர்தன

0 682

தொடர் குண்டுத் தாக்குதல்களின் பின்னர், இஸ்லாமிய மதகுருமார் 200 பேர் உட்பட 600 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேர்வதன இன்று தெரிவித்துள்ளார்.

மேற்படி மதகுருமார் சட்டபூர்வமாக இலங்கைக்கு வந்தபோதிலும், விஸா காலாவதியான பின்னரும் அவர்கள் தொடர்ந்து தங்கியிருந்தனர் என அமைச்சர் வஜிர அபேர்வதன கூறினார்.

‘நாட்டின் தற்போதைய நிலைகளை கருத்திற்கொண்டு, நாம் விசா முறைமுயை மீளாய்வு செய்துள்ளோம். மத ஆசிரியர்களுக்கான விசா வழங்குவதை நாம் கடினமாக்கியுள்ளோம்’ என அமைச்சர் கூறியுள்ளார்.

வெளியேற்றப்பட்டவர்களில் சுமார் 200 பேர் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் எனவும் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!