தலவாக்கலையில் மண்சரிவு: ஒருவர் பலி, இருவர் காயம்!

0 217

                                                                          (க.கிஷாந்தன், பொகவந்தலவா சதீஸ்,கேதீஸ்)
தலவாக்கலை நகரில் கொத்மலை பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள வங்கி ஒன்றின் பின் புறமாக ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (05) பகல் இடம்பெற்றது. குறித்த பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் பின்புறமாக மதில் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கும் பணியில் 20 பேர் ஈடுப்பட்டிருந்ததுடன் இதில் மூவர் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மூவரையும் மீட்டுள்ள சக பணியாளர்கள் முதலில் இருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதனையடுத்து மற்றவரையும் மீடடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் லிந்துலை பாமஸ்டன் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏ.என்.ஜெயரத்ன வயது 34 என அடையாளம் காணப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட மூவரையும் பிரதேச மக்கள், இராணுவத்தினர் தலவாக்கலை பொலிஸார் ஆகியோர் இணைந்து மீட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!