நல்ல நோக்கத்துக்காக பெண்களிடம் சவரம் செய்துகொண்டார் சச்சின்!

0 407

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இரண்டு மாணவிகளின் கல்வி உதவிக்காக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவனும் இரட்டை உலக சாதனையாளருமான சச்சின் டெண்டுல்கர் பெண்களிடம் சவரம் செய்தகொண்டுள்ளார்.

பெண்களிடம் சவரம் செய்துகொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் எனது வாழ்க்கையில் இதற்கு முன்னர் நான் மற்றொருவரிடம் சவரம் செய்துகொண்டதில்லை. அந்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சவரக்கடைப் பெண்களை சந்தித்ததைப் பெருமையாகக் கருதுகின்றேன் என அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்வாரி டோலா என்ற கிராமத்தை சேர்ந்த நேகா, ஜோதி ஆகிய இரு இளம் பெண்கள் சலூன் கடை நடத்தி வருகிறார்கள். அவர்களது தந்தை 2014இல் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியதால் தந்தையின் தொழிலை இந்த இரண்டு பெண்களும் செய்ய வேண்டிய நிலை உருவானது.

ஆரம்பத்தில் இவர்களிடம் ஆண்கள் முடி வெட்டவோ அல்லது முகச்சவரம் செய்யவதற்கோ தயங்கினர். காலம் செல்லசெல்ல நிலைமை மாறியது. நேகாவும் ஜோதியும் வேலை பார்த்து கொண்டே கல்வியை தொடருகிறார்கள். தந்தையின் மருத்துவ செலவையும் கவனித்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இந்த பெண்களின் கல்வி உதவிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அவர்களிடம் சவரம் செய்து கொள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிறுவனம் சார்பில இரண்டு பெண்களினதும் கல்விக்கும்இ தொழிலுக்கும் தேவையான உதவிகளையும் டெண்டுல்கர் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!