நீர்கொழும்பில் நடந்தது என்ன? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியவை!

0 2,786

                                                                                                                                            (எம்.எப்.எம்.பஸீர்)
நீர்கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போரதொட்ட பகுதியில்  இருவருக்கிடையிலான  வாய்த்தர்க்கம் குழு  மோதலாக மாறியதால் அதனைக் கட்டுப்படுத்த  இன்றிரவு (05)  உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி நீர்கொழும்பு பொலிஸ்  வலயத்துக்கு உட்பட்ட 11 பொலிஸ் பிரிவுகளில் நேற்று இரவு 7.30 மனி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், பிரதேசத்தின் அமைதியை உறுதி செய்வதற்காக நாளைக் காலை 7.00 மணிவரை இந்த  ஊரடங்கு அமுல் செய்யப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

இதேவேளை, போரதொட்ட பகுதியில்  சிறியவிலான   சேதங்கள் பதிவாகியுள்ளன. நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் அதிரடிப் படையினரும் முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்ட நிலையில்,  சுமுக நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!