ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாகவிருந்த மில்ஹானை தேடி சி.ஐ.டி. வலைவீச்சு!

0 420

                                                                                                                                      (எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய சி.ஐ.டி. சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

குறித்த  தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் ஸஹ்ரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதபப்டும் மில்ஹான் என்ற  நபரைத் தேடியே இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக பாதுகாபபு உயர்மட்ட தகவல்கள் மெட்ரோ நியூஸுக்குத் தெரிவித்தன. 

மில்ஹான் எனும் குறித்த நபர்  தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு  உம்ராவுக்காக சென்றுள்ளதாக சி.ஐ.டி.க்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவர் மீள இலங்கைக்கு திரும்பவில்லை எனவும் அவரது பயணப் பொதி மட்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டன. அதன்படி மில்ஹானைக் கைது செய்ய சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!