‘அந்தத் தகவலில் உண்மை இல்லை’ பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

0 294

                                                                                                                                            (எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் நாட்டில் உள்ள முக்கிய பாலங்கள்  பயங்கரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப்படப் போவதாக வெளியான தகவல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவ்வாறான திட்டம் ஒன்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

 பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக அது தொடர்பில்  ஆராயவே பாலங்கள் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் யாரும் அச்சமடைய தேவை இல்லை எனவும், தற்போது அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும்  பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார். 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!