புர்கா அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்!- பைஸர் முஸ்தபா

0 349

                                                                                                                              (இராஜதுரை ஹஷான்)

நாட்டின்  தற்போதைய அசாதாரண  சூழ்நிலையையும் தேசிய பாதுகாப்பையும்   கருத்திற்   கொண்டு   முஸ்லிம் பெண்கள்   புர்கா அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அரசாங்கத்துக்கு தீர்மானத்துக்கு முரணாக செயற்படுபவர்கள்   சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்படுவார்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர்  பைஸர் முஸ்தபா  தெரிவித்துள்ளார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  உரிய  நேரத்தில் முறையான  வழிநடத்தலை முன்னெடுக்காவிடின்  மீண்டுமொரு  கறுப்பு  ஜுலை  கலவரம்   நாட்டில்  ஏற்பட்டிருக்கும். அரசியல்வாதிகளால் முடியாதவற்றை மதத்தலைவர் என்ற ரீதியில்   நிறைவேற்றியுள்ளமையினால் முஸ்லிம் மக்கள் அனைவரும்  ஆண்டகையைக்   கௌரவப்படுத்த வேண்டும் என  தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள  இவரது உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில்  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு   முரனாக   ஒரு தரப்பினர் செய்த  முறையற்ற செயற்பாட்டின் காரணமாக  ஒட்டுமொத்த  முஸ்லிம் மக்களும்  அபகீர்த்தி அடைந்துள்ளார்கள்.  இஸ்லாத்தின் அடிப்படைவாதிகள் என்று இவர்களை அடையாளப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தற்கொலை  குண்டுத் தாக்குதலை  நடத்தியவர்கள்.  மனிதாபிமான நேயமற்ற  தீவிரவாதிகள்  இவர்கள் அனைவரும்   அழிக்கப்பட்டு  துடைத்தெறியப்பட வேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!