ரஷ்ய விமானம் தீப்பற்றியதால் 41 பேர் பலி

0 261

ரஷ்யாவில் விமானமொன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொஸ்கோவிலுள்ள ஷேர்மேட்யேவோ விமான நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர்களில் இரு சிறார்களும் அடங்குவதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் தேசிய விமான சேவையான ஏரோஃபுளொட் நிறுவனத்துக்குச் சொந்தமான சுகோய் சுப்பர்ஜெட் 100 ரகத்தைச் சேர்ந்த விமானமே இவ்வாறு தீப்பற்றியது.

இவ்விமானம்  நேற்று மாலை ஷேர்மெட்யேவோ விமான நிலையத்திருந்து மர்மன்ஸ்க் நகரை நோக்கி புறப்பட்டது. அவ்விமானத்தில் 78 பயணிகள் இருந்தனர். 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்விமானம் மீண்டும் ஷேர்மெட்யேவோ நகருக்கு விமானம் திசை திருப்பப்பட்டது.

 அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது விமானம் தீப்பற்றியது. இதனால் 41 பேர் உயிரிழந்துள்ளனர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!