பாடசாலைகளில் படையினர் சோதனை!

0 182

இலங்­கையின் பாட­சா­லை­களில் பொலி­ஸாரும் பாது­காப்புப் படை­யி­னரும் இன்று  தீவிர சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர்.

அர­சாங்கப் பாட­சா­லை­களில் 6 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்­பட்ட வகுப்­புகள் (நாளை)  திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், இச்­சோ­த­னைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

நாடு முழு­வ­து­முள்ள சுமார் 10900 பாட­சா­லை­களில் இச்­சோ­தனை நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மோப்­ப­நாய்­களும் இதற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டன.

2 ஆம் தவ­ணைக்­காக அர­சாங்கப் பாட­சா­லைகள் ஏப்ரல் 22 ஆம் திகதி மீண்டும் திறக்­கப்­ப­ட­வி­ருந்­தன. எனினும், ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவா­ல­யங்கள், ஹோட்­டல்­களில் பாரிய தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து பாட­சா­லைகள் தொடர்ந்தும் மூடப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில், 6 மற்றும் அதற்கு மேற்­பட்ட வகுப்­புகள் இரண்டாம் தவ­ணைக்­காக நாளை திறக்­கப்­படும் எனவும் 1 முதல் 5 வரை­யான வகுப்­புகள் எதிர்­வரும் 13 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 (படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!