தம்மீது சேற்றுநீர் பட்டதால் ஆத்திரமுற்ற முச்சக்கர வண்டிச் சாரதிகள் பஸ்ஸை துரத்திச் சென்று சாரதியின் தலையை தேங்காயினால் தாக்கினர்

0 170

குழி ஒன்றில் காணப்­பட்­ட­சேற்று நீர் பஸ் ஒன்றின் சக்­க­ரத்தில் பட்டு தங்கள் மீது தெறித்­ததால் ஆத்­திரம் கொண்ட முச்­சக்­கர வண்டி சார­திகள், பஸ்ஸை பின் தொடர்ந்து சென்று அதன் சார­தியின் தலையை தேங்­கா­யினால் தாக்­கி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 இதனால் படு­கா­ய­ம­டைந்த சாரதி கம்­பளை வைத்­திய சாலையில் அனு­ம­திக்கப்பட்­டுள்ளார். சந்­தேக நபர்­களின் ஒரு­வரை கம்­பளைப் பொலிஸார் கைது செய்­துள்­ள­துடன் தலை மறை­வான மற்­றைய நபரை தேடி வரு­கின்­றனர்.

சம்­பவ தின­மான கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை குறித்த பய­ணிகள் பஸ் கண்­டி­யி­லி­ருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற போது கம்­பளை ஹெட்­காலை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள முச்­சக்­கர வண்டி நிறுத்­து­மி­டத்தை கடந்து சென்ற சந்­தர்ப்­பத்தில் அவ்­வி­டத்தில் சேற்றுக் குழிக்குள் தங்­கி­யி­ருந்த தண்­ணீரில் பஸின் டயர் வீழ்ந்­ததில் அதி­லி­ருந்த சேற்று நீர் சந்­தே­க­ந­பர்கள் மீது பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இதனால் ஆத்­திரம் கொண்ட முச்­சக்­கர வண்டி சார­திகள், குறித்த பஸ்ஸை பின் தொடர்ந்து சென்று உலப்­பனை உட­கம பிர­தே­சத்தில் வைத்து அதனை மறித்து சார­தியின் தலையில் தேங்­கா­யினால் தாக்­கி­ய­தான விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கி­றது. இதனால் காய­ம­டைந்த சாரதி கம்­பளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!