பூண்டுலோயாவில் விநியோகிப்பதற்காகக் கிடைத்த கடிதங்களின் ஒரு தொகுதியை தபாலகத்தின் பின்புறமாக தீ வைத்து எரித்த ஊழியர்; வீட்டில் மேலும் 300 கடிதங்கள் சிக்கின!

0 404

(பொக­வந்­த­லாவ நிருபர் எஸ்.சதீஸ்)

மக்­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­தற்­காக வந்து சேர்ந்த கடி­தங்­களில் ஒரு தொகையை தீ வைத்தும் மேலும் சுமார் 300 கடி­தங்­களை தனது வீட்டில் மறைத்து வைத்­தி­ருந்தார் என்றும் கூறப்­படும் பூண்­டு­லோயா தபால் நிலை­யத்தில் பணி புரியும், தபால்­களை விநி­யோ­கிக்கும் ஊழியர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து அவரை நாவ­லப்­பிட்டி நீதி­மன்றில் பதில் நீதிவான் அமி­ல­மதுசங்க சரச்­சந்ர முன்­னி­லையில் சனிக்­கி­ழமை ஆஜர்­ப­டுத்­திய போது இம்­மாதம் 8 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

பொது­மக்­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­தற்­காக பூண்­டு­லோயா தபா­ல­கத்­துக்குக் கிடைத்த கடி­தங்­களின் ஒரு தொகையை சந்­தேக நபர் பூண்­டு­லோயா தபால்­நி­லை­யத்­துக்குப் பின்­பு­ற­மாக வைத்து தீயிட்டு எரித்­துள்ளார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் பூண்­டு­லோயா பொலி­ஸா­ருக்கு கிடைக்­க­பெற்ற தக­வ­லுக்கு அமைய விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார், குறித்த சந்­தேக நபரைக் கைது செய்­­தனர். பின்னர் பூண்­டு­லோயா ஏரோல் கீழ்ப் பிரிவு தோட்­டத்தைச் சேர்ந்த குறித்த சந்­தேக நபரின் வீட்டைப் பொலிஸார் சோத­னை­யிட்­ட­போது சந்­தேக நபரின் வீட்­டி­லி­ருந்து சுமார் 300 கடி­தங்கள் கைப்­பற்­றப்­பட்­டன.

இந்தச் சம்­பவம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­ற­தாக பூண்­டு­லோயா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஏ.எஸ்.டபிள்யூ.ரஞ்சன் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!