ரிவோல்வருடன் படைவிட்டோடி கைது!

0 759

                                                                                           (களுத்துறை என் ஜெயரட்னம்)

மில்லி மீட்டர் 9 ரக தோட்டாக்களைப் பயன்படுத்தக் கூடியதான ரிவோல்வர் ஒன்றுடன் படைவிட்டோடி ஒருவரை   களுத்துறை பொலிஸ் வலய சட்ட அமுலாக்கல் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் பெலவத்தை, கோரதூவ பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
32 வயதான சந்தேக நபர் மாப்பலகம, நியாகம பகுதியை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஆவார். இவர் இராணுவ சேவையிலிருந்து தப்பிவந்தவர் எனவும் மணல் வியாபாரத்திலும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!