யாழில் இரு இடங்களில் வீசப்பட்டுக் காணப்பட்ட வாள்கள் மீட்பு!

0 292

                                                                                                                   (மயூரன்)
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனையின்போது வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள் ஒன்று வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைகளின் மேல் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொலிஸாரால் நேற்று சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் கல்லூரியின் மண்டபம் ஒன்றில் மேல்மாடியிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொக்குவில் வராகி அம்மன் கோவிலடியில் வாள் ஒன்று வீசப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் அதனை மீட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!