உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அரவிந்த, குருசின்ஹவுக்கான தகவல்களை சொல்ல முடியாமல் போனதை மறக்க முடியாது- ரவீந்­திர புஷ்­ப­கு­மார

0 183

1996 உலகக் கிண்ண இறுதிப் போட்­டி­யின்­போது 12ஆவது வீர­ராக செயற்­பட்­ட­போதே தனது கிரிக்கெட் வாழ்க்­கையில் மிகப் பெரிய மன அழுத்­தத்தை எதிர்­கொண்­ட­தாக இலங்­கையின் முன்னாள் வேகப்­பந்­து­வீச்­சாளர் ரவீந்­திர புஷ்­ப­கு­மார தெரி­விக்­கின்றார்.

மார்க் டெய்லர் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லிய அணிக்கும் அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான இலங்­கைக்கும் இடை­யி­லான இறுதிப் போட்டி லாகூர் கடாபி விளை­யாட்­ட­ரங்கில் 1996 மார்ச் 17ஆம் திகதி நடை­பெற்ற­போதே ரவீந்­திர புஷ்­பு­கு­மார கடும் மன அழுத்­தத்தை எதிர்­நோக்­கி­யி­ருந்தார்.

அப் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா 50 ஓவர்­களில் 7 விக்­கெட்­களை இழந்து 241 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

242 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி தனது ஆரம்ப விக்­கெட்­களை (சனத் ஜய­சூ­ரிய, ரொமேஷ் களு­வித்­தா­ரண) ஆகி­யோரை குறைந்த எண்­ணிக்­கை­க­ளுக்கு இழந்­தது. அதன் பின்னர் அர­விந்த டி சில்­வாவும் அசன்க குரு­சின்­ஹவும் திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தா­டிக்­கொண்­டி­ருந்­த­போது தாக­சாந்­திக்­காக ஆட்டம் நிறுத்­தப்­பட்­டது.அப்­போ­துதான் ரவீந்­திரன் புஷ்­ப­கு­மா­ர­வுக்கு தூதுகள் குவியத் தொடங்­கின.

“வீரர்கள் தங்கும் அறையில் ஒவ்­வொ­ரு­வ­ராக என்­னிடம் வந்து, “இந்தத் தக­வலை அர­விந்­த­விடம் தெரிவி. வேக­ப்பந்து வீச்சை அல்ல, சுழல்­பந்­து­வீச்சை மாத்­திரம் விசுக்கி அடிக்க சொல்­வதை உறுதி செய்­துகொள். இப்­படி வீரர்கள் தங்­கு­ம­றையில் உள்­ள­வர்கள் வெவ்வேறு தக­வல்­களை என்­னிடம் கூறி­ய­வண்ணம் இருந்­தனர்” என புஷ்­ப­குமார் குறிப்­பிட்டார்.

“நான் படி­களில் இறங்கி ஆடு­க­ளத்­தினுள் செல்ல தயா­ரா­ன­போது பயிற்­றுநர் டேவ் வட்மோர் அங்கு இருந்தார். தூது சொல்­லு­மாறு அவர் என்­னுடன் ஒரு நிமிடம் பேசினார். அவர் என்ன சொன்னார் என்­பதை என்னால் புரிந்­து­கொள்­ள­மு­டி­ய­வில்லை. ஏனெனில் அப்­போது எனது ஆங்­கில அறிவு அவ்­வ­ளவு நன்­றாக இருக்­க­வில்லை. கடை­சியில் அவ­ரிடம் “ஓகே டெவி” என்று சொல்­லி­விட்டு அரங்­குக்குள் ஓடிச் சென்றேன்.

“அர­விந்­த­வையும் குரா­வையும் அண்­மித்­த­போது நான் முழு­மை­யாக திண­றிப்­போனேன். அண்ணா சிறப்­பாக விளை­யா­டு­கின்­றீர்கள், தொட­ருங்கள் என்று ஏதோ சொன்­னது நினை­வுக்கு வரு­கின்­றது. அப்­படி சொல்­லி­விட்டு திருப்பி ஓடினேன். யாரோ ஒருவர் என்­னிடம் வந்து, “புஷி அவர்­க­ளுக்கு சொன்­னாயா? என்று கேட்டார்.

நான் சொன்னேன் என்றேன். நான் சொன்­னதை அவ­ருக்கு தெரி­வித்­தாயா? என மற்­றொ­ருவர் கேட்டார். அதற்கும் நான் ஆமாம் என்றேன். அதன் பின்னர் டேவ் வந்து என்­னிடம் ஏதோ கேட்டார். அதனை என்னால் புரிந்­து­கொள்­ள­மு­டி­ய­வில்லை. ஆனால் அவர் இன்­ன­தைத்தான் கேட்­டி­ருப்பார் என ஊகித்­துக்­கொண்டு, ஆம் நான் சொன்னேன் என ஆங்­கி­லத்தில் கூறினேன்.

ஏனைய அனை­வரும் அவர்­களால் வழங்­கப்­பட்ட தூது­களை நான் சொல்­லி­விட்டேன் என நம்­பினர். ஆனால் டேவ் உறு­தி­யில்­லா­த­வ­ராக என்னை நோக்­கினார்” என தூது­வ­னாக (12ஆவது வீரர்) தனது அனு­ப­வத்தை புஷ்­ப­கு­மார பகிர்ந்தார்.

“எனது வாழ்க்­கையில் அந்த சந்­தர்ப்­பத்­தில்தான் நான் மிகப் பெரிய மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். உலகக் கிண்ணத்தை நாம் வென்றதை எக்காலமும் நினைத்திருப்பேன். ஆனால், ஒரு தூதுவனாக ஒரு தகவலையேனும் தூது சொல்ல முடியாமல் போனதை என்னால் ஒருநாளும் மறக்கமுடியாது” என்று ரவீந்திரன் புஷ்பகுமார கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!