5 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; 51 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு

0 79

நாடா­ளு­மன்ற மக்­க­ள­வைக்கு 51 தொகு­தி­களில் 5-ஆம் கட்­ட­மாக நடை­பெ­ற­வுள்ள தேர்­த­லுக்­கான பிரச்­சாரம் நேற்று முன்­தினம் மாலை­யுடன் ஓய்ந்­தது. இன்று வாக்குப் பதிவு நடை­பெ­று­கி­றது.

நாடா­ளு­மன்ற மக்­க­ள­வையில் உள்ள 543 இடங்­க­ளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்­டங்­க­ளாக தேர்தல் நடை­பெறும் என்றும் வாக்கு எண்­ணிக்கை மே 23இ-ல் நடை­பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறி­வித்­தது.

இதன்­படி, 4 கட்ட தேர்தல் ஏற்­கெ­னவே நடந்து முடிந்­து­விட்­டது. 5-ஆம் கட்­ட­மாக, பிஹார் (5), ஜம்மு காஷ்மீர் (2) ஜார்க்கண்ட் (4), மத்­திய பிர­தேசம் (7), ராஜஸ்தான் (12), உத்­த­ர­பி­ர­தேசம் (14), மேற்­கு­வங்கம் (7) உட்­பட 7 மாநி­லங்­க­ளுக்­குட்­பட்ட 51 மக்­க­ளவை தொகு­தி­களில் நேற்று முன்­தினம் மாலை­யுடன் பிரச்­சாரம் ஓய்ந்­தது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்­கு­கி­றது. தேர்தல் நியா­ய­மா­கவும் அமை­தி­யா­கவும் நடை­பெ­று­வதை உறுதி செய்­வ­தற்­காக தேர்தல் ஆணையம் விரி­வான பாது­காப்பு ஏற்­பா­டு­களை செய்­துள்­ளது. மின்­னணு வாக்குப் பதிவு இயந்­தி­ரங்கள் உள்­ளிட்­ட­வற்றை அந்­தந்த வாக்­குச்­சா­வ­டி­க­ளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடை­பெற்­றது.

இந்த 5ஆ-ம் கட்ட தேர்­தலில் 674 வேட்­பா­ளர்கள் களத்தில் உள்­ளனர். சுமார் 8.76 கோடி பேர் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். மொத்தம் 96,088 வாக்­குச்­சா­வ­டிகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. காங்­கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்­டி­யிடும் அமேதி, அவ­ரது தாய் சோனியா காந்தி போட்­டி­யிடும் ரேப­ரேலி, மத்­திய அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்­டி­யிடும் லக்னோ ஆகிய தொகு­தி­க­ளிலும் இன்று வாக்குப் பதிவு நடை­பெ­று­கி­றது.

முன்­ன­தாக பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!