இளவரசர் ஹரி, மேகன் மேர்கெல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

0 73

பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மேர்கெல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சசெக்ஸ் சீமாட்டியான மேகன் மேர்கெல், பிரித்தானிய நேரப்படி காலை 05.26 மணிக்கு குழந்தையை பிரசவித்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3.2 கிலோகிராம் எடையுடன் பிறந்த இக்குழந்தையும் மேகன் மேர்கெலும் ஆரோக்கியமாக உள்ளனர் என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

இக்குழந்தை பிரித்தானிய அரச குடும்பத்தின் முடிக்குரிய வாரிசுகள் வரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!