நாட்டின் சிறந்த உழைப்பாளருக்கான பரிசை தனது மகளுக்கு வழங்கிய புரூண்டி ஜனாதிபதி

0 200

உழைப்­பாளர் தினத்தில் தனது நாட்டின் மிகச் சிறந்த உழைப்­பா­ளிக்கு வழங்­கப்­ப­டு­வ­தற்­கான பரிசை, 12 வய­தான தனது மக­ளுக்கு வழங்­கி­யுள்ளார் புரூண்டி நாட்டின் ஜனா­தி­பதி.

புரூண்­டியின் ஜனா­தி­ப­தி­யாக பியரி என்­கு­ருன்­ஸிஸா பதவி வகிக்கிறார். சர்­வ­தேச உழைப்­பாளர் தினத்தை முன்­னிட்டு, சிறந்த உழைப்­பா­ளிக்கு பரிசு வழங்கும் வைபவம் தலைநகர் புஜும்­பு­ரா­வி­லி­ருந்து 80 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள ருமோஞ் நகரில் கடந்த முதலாம் திகதி நடை­பெற்­றது.

இந்­நி­கழ்வில் சிறந்த உழைப்­பா­ளிக்­கான பரிசை ஜனா­தி­பதி என்­கு­ருன்­ஸிஸா எவ­ருக்கு வழங்­கப்­போ­கிறார் என பலரும் காத்­தி­ருந்­தனர்.

ஆனால், 12 வய­தான தனது மகள் நயோ­மிக்கு சிறந்த உழைப்­பா­ளிக்­கான பணப்­ப­ரிசு அடங்­கிய கடித உறையை ஜனா­தி­பதி என்­கு­ருன்­ஸிஸா வழங்­கினார்.

அதில் எவ்­வ­ளவு பணம் இருந்­தது என்ற விடயம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.தனது மகள் நயோமி கடி­ன­மாக பாடு­ப­டு­பவர் எனவும், புரூண்­டிய மக்­களின் கலா­சா­ரத்தை அவர் நேசிக்­கிறார் எனவும், வீட்டில் அவர் சிறப்­பாக நடந்­து­கொள்­கிறார் எனவும் ஜனா­தி­பதி பியரி என்குருன்ஸிஸா தெரிவித்தார் என புரூண்டியின் அரச வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo