தௌ்ளுப்பூச்சிகளின் படையெடுப்பினால் பிரெஞ்சு பொலிஸ் நிலையம் மூடப்பட்டது

0 173

தெள்ளுப்பூச்சிகளின் படை­யெ­டுப்­பினால் பிரான்ஸில் பொலிஸ் நிலை­ய­மொன்று மூடப்­பட்­டுள்­ளது.பாரிஸின் வட­கி­ழக்கு பிராந்­தி­யத்­தி­லுள்ள பொலிஸ் நிலை­ய­மொன்றே இவ்­வாறு நேற்­று­முன்­தினம் மூடப்­பட்­ட­தாக உள்ளூர் பொலிஸ் சங்­க­மொன்று தெரி­வித்­துள்­ளது.

பாரிஸின் 19 ஆவது பிரி­வி­லுள்ள இப்­பொலிஸ் நிலையம், தெள்ளுப்பூச்சிகளின் அச்­சு­றுத்தல் கார­ண­மாக மறு அறி­வித்தல் வரை மூடப்­பட்­டுள்­ளது என மேற்­படி சங்கம் தெரி­வித்­துள்­ளது.

இரத்தம் உறிஞ்சும் இப்பூச்சிகளின் படை­யெ­டுப்பு கார­ண­மாக, அப்­பொலிஸ் நிலை­யத்தில் வேலைச் சூழ்­நி­லை­யா­னது சகிக்க முடி­யா­த­தாக மாறியுள்ளது என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo