எகிப்தில் 4,500 வருடங்கள் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு

0 281

சுமார் 4500 வரு­டங்கள் பழைமை வாய்ந்த புரா­தன கல்­ல­றை­யொன்றை எகிப்­திய தொல்­பொருள் ஆய்­வா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

   

பிர­சித்தி பெற்ற கைஸா பிர­மிட்­டுக்கு அருகில் இப்­பு­ரா­தன கல்­லறை கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக எகிப்தின் தொல்­பொருள் துறை அமைச்சு கடந்த சனிக்­கி­ழமை தெரி­வித்­துள்­ளது.

இக்­கல்­ல­றை­யி­லி­ருந்து இரு மம்­மி­களும் (பதப்­ப­டுத்­தப்­பட்ட உடல்கள்) கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. ‘அப்­ப­கு­தியில், பல்­வேறு காலத்­துக்­கு­ரிய பல கல்ல­றைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தன.

எனினும், மிகப் பழை­­மை­யான இக்­கல்­ல­றை­யா­னது கிறிஸ்­து­வுக்கு முன் 2500 ஆம் வருட காலத்தில், சுண்­ணாம்­பினால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட, ஒரு குடும்ப ­கல்­லறை ஆகும்’ என மேற்­படி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இக்­கல்­ல­றையின் சுவர்­களில் எழுத்­துக்கள் எழு­தப்­பட்­டி­ருந்­த­தா­கவும், சவப்பெட்டிகளில் மிருகங்கள் மற்றும் மனித உருவங்கள் வரையப்பட்டிருந்ததாகவும் ஏ.எவ்.பி தெரிவித்துள்ளது.

இக்கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் ஒன்று, மத போதகர், நீதிபதி உட்பட 7 பதவிகளைக் கொண்டிருந்த பெஹ்னுய் கா என்பவருடையது எனவும் மற்றொரு மம்மி, மன்னர் கப்ராவின் தூய்மையாக்குனராக விளங்கிய என்வி என்பவருடையது எனவும் எகிப்திய தொல்பொருள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எகிப்தில் செப்ரென் என அறியப்பட்ட மன்னர் கப்ரா, கைஸா நகரின் பிரசித்தி பெற்ற 3 பிரமிட்களில் இரண்டாவது பிரமிட்டை நிர்மாணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!