கோடீஸ்வரரின் வாரிசாக நடித்து 4.8 கோடி ரூபா மோசடி செய்த யுவதி

0 279

கோடீஸ்­வரர் ஒரு­வரின் வாரி­சாக நடித்து, நியூயோர்க்­கி­லுள்ள செல்­வந்­தர்கள், உல்­லாச ஹோட்டல் நிர்­வா­கி­களை ஏமாற்றி பண மோசடி செய்­தமை தொடர்­பாக யுவ­தி­யொ­ருவர் குற்­ற­வாளி என அமெ­ரிக்க நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

28 வய­தான அனா சொரோகின் எனும் யுவ­தியே இவ்­வாறு குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டுள்ளார். இவர் அனா டெல்வி எனும் பெயரில் நடித்து நியூ யோர்க் உயர்­மட்­டத்­தி­னரை ஏமாற்­றி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

1991 ஆம் ஆண்டு ரஷ்­யாவில் பிறந்தர்வர் அனா சொரோகின். அவரின் தந்தை லொறி சார­தி­யாக பணி­யாற்­றி­யவர். அவரின் தாயார் சிறிய கடை­யொன்றை நடத்தி வந்தார்.

அனா­வுக்கு 16 வய­தான போது அவரின் பெற்றோர் ஜேர்­ம­னிக்கு குடி­பெ­யர்ந்­தனர். ஜேர்­ம­னியில் கல்வி கற்ற அனா சொரோகின், பின்னர் லண்­டனில் உயர்­கல்வி கற்­ப­தற்குச் சென்றார். பின்னர் மீண்டும் ஜேர்­ம­னிக்குத் திரும்பி வந்தார்.

அதன்பின் பிரான்ஸின் பாரிஸ் நக­ருக்குச் சென்ற அவர், சஞ்­சி­கை­யொன்­றுக்­காக பணி­யாற்­றினார். அங்கு தனது பெயரை அனா டெல்வி என்று மாற்­றிக்­கொண்டார்.

பின்னர், அமெ­ரிக்­கா­வுக்குச் சென்ற அனா, தான் கோடீஸ்­வரர் ஒரு­வரின் வாரிசு எனக்­கூ­றிக்­கொண்டு நியூயோர்க்­கி­லுள்ள உயர்­மட்ட சமூ­கத்­த­வர்­க­ளிடம் நெருங்கிப் பழ­கினார்.

பல வர்த்­தக நிலை­யங்கள், உல்­லாச ஹோட்­டல்­களை இவர் ஏமாற்றி, 270,000 சென்றார். பின்னர் மீண்டும் ஜேர்­ம­னிக்குத் திரும்பி வந்தார். அதன்பின் பிரான்ஸின் பாரிஸ் நக­ருக்குச் சென்ற அவர், சஞ்­சி­கை­யொன்­றுக்­காக பணி­யாற்­றினார். அங்கு தனது பெயரை அனா டெல்வி என்று மாற்­றிக்­கொண்டார்.

பின்னர், அமெ­ரிக்­கா­வுக்குச் சென்ற அனா, தான் கோடீஸ்­வரர் ஒரு­வரின் வாரிசு எனக்­கூ­றிக்­கொண்டு நியூயோர்க்­கி­லுள்ள உயர்­மட்ட சமூ­கத்­த­வர்­க­ளிடம் நெருங்கிப் பழ­கினார்.

பல வர்த்­தக நிலை­யங்கள், உல்­லாச ஹோட்­டல்­களை இவர் ஏமாற்றி, 270,000 டொலர்­களை (சுமார் 4.8 கோடி ரூபா) மோசடி செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது. 2017 ஆம் ஆண்டு அனா கைது செய்­யப்­பட்டார்.

இது தொடர்­பாக நடை­பெற்ற வழக்கில் அனா சொரோகின் குற்­ற­வாளி என நியூயோர்க் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை நாளை வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo