வரலாற்றில் இன்று மே 08 : 1886 கொக்கா கோலா அறிமுகமானது

0 155

1788: 47 நீதி­மன்­றங்­களால் மாற்­றீடு செய்­யப்­ப­டு­வ­தற்­காக பிரெஞ்சு நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டது.

1842: பாரிஸ் நகரில் ரயி­லொன்று தீப்­பற்­றி­யதால் 52 பேர் பலி­யா­ன­துடன் 200 பேர் காய­ம­டைந்­தனர்.

1886: அமெ­ரிக்க மருந்­த­க­வி­ய­லாளர் ஜோன் பெம்­பேர்ட்டன் என்­பவர் காபன் கலந்த பான­மொன்றை “கொக்கா கோலா” என்ற பெயரில் பதி­வு­செய்­யப்­பட்ட மருந்­தாக விற்­பனை செய்ய ஆரம்­பித்தார்.

1898: இத்­தா­லிய கால்­பந்­தாட்ட லீக்கின் முதல் போட்டி நடை­பெற்­றது.

1902: கரீ­பியன் தீவு­களில் ஒன்­றான மார்ட்­டி­னிக்­கி­லுள்ள எரி­ம­லை­யொன்று வெடித்­ததால் சுமார் 30,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1919: முதல் உலகப் போரில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்­சலி செலுத்தும் யோச­னையை அவுஸ்­தி­ரே­லிய படை­வீ­ரரும் ஊட­க­ வி­ய­லா­ள­ரு­மான எட்வர்ட் ஜோர்ஜ் ஹொனி முன்­வைத்தார்.

1927: முதல் தட­வை­யாக இடை­நி­றுத்­தப்­ப­டாத விமானப் பறப்பு மூலம் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தை கடப்­ப­தற்­காக பிரான்­ஸி­லி­ருந்து நியூயோர்க்­கிற்கு புறப்­பட்ட சார்ள்ஸ் நங்­கீஸர், பிரான்கோய்ஸ் கோலி ஆகியோர் காணாமல் போயினர்.

1933: இந்தியாவில் மகாத்மா காந்தி 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1980: சின்னம்மை நோய் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

1945: ஜேர்மனியுடனான யுத்தம் முடிவடைந்துவிட்டதாக பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் அறிவித்தார்.

1945: அல்ஜீரியாவில் பிரெஞ்சுப் படையினரால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1972: இஸ்ரேலை நோக்கிச் சென்ற பெல்ஜிய விமானமொன்றை கறுப்பு செப்டெம்பர் இயக்கத்தினர் கடத்தினர். மறுநாள் இஸ்ரேலிய படையினரால் இவ்விமானம் மீட்கப்பட்டது.

1984: அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என சோவியத் யூனியன் அறிவித்தது.

1997: சீன விமானமொன்று சீனாவின் பாவோயென் சர்வதேச விமான நிலையத்தில் வீழ்ந்ததால் 35 பேர் உயிரிழந்தனர்.

2014: சுமார் 399 கோடி ரூபா வற் வரி மோசடி தொடர்பான குற்றங்களுக்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஏ.ஞானசிறி டீ சொய்சாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 102 ஆண்டு சிறைத்தண்டனையும் 1200 கோடி ரூபா அபராதமும் விதித்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!