முன்னாள் மிஸ் உருகுவே அழகுராணி மெக்ஸிகோ ஹோட்டலில் சடலமாக மீட்பு

0 512

உரு­வேயின் முன்னாள் அழ­கு­ரா­ணி­களில் ஒரு­வ­ரான ஃபத்­திமி டேவிலா, மெக்­ஸி­கோ­வி­லுள்ள ஹோட்டல் ஒன்றில் மர்­ம­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.

2006 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் உரு­குவே அழ­கு­ரா­ணி­யாக ஃபத்­திமி டேவிலா தெரி­வானார். அவ்­வ­ருடம் அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடை­பெற்ற மிஸ் யூனிவர்ஸ் (பிர­பஞ்ச அழ­கு­ராணி) போட்­டியில் உரு­குவே சார்பில் அவர் பங்­கு­பற்­றினார். பின்னர் மொடலிங் துறையில் அவர் ஈடு­பட்­டி­ருந்தார்.

31 வய­தான டேவிலா, மெக்­ஸி­கோவின் தலை­நகர் மெக்­ஸிகோ சிற்­றி­யி­லுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்­கி­யி­ருந்த நிலையில் கடந்த வியா­ழக்­கி­ழமை சட­ல­மாக காணப்­பட்டார். குளி­ய­ல­றையில் தூக்­கி­லி­டப்­பட்ட நிலையில் அவரின் உடல் காணப்­பட்­டது.

இந்­நி­லையில், அவர் தற்­கொலை செய்­து­கொண்­டாரா அல்­லது கொலை செய்­யப்­பட்­டாரா என்­பது குறித்து மெக்­ஸிகோ சிற்றி அதி­கா­ரிகள் ஆராய்ந்து வரு­கின்­றனர்.

இது தொhடர்­பாக, மெக்­ஸிகோ அதி­கா­ரிகள் தெரி­விக்­கையில், ‘ஆரம்ப விசா­ர­ணை­க­ளின்­படி, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மெக்­ஸிகோ சிற்­றிக்கு ஃபத்­திமி டேவிலா வந்­துள்ளார். நேர்­முகத் தேர்வு ஒன்றுக்கு முன்னர் மேற்படி ஹேட்டலில் தங்குவதற்கு ஆரம்பித்தார் எனக் கூறியுள்ளனர். 

மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டியின் முன்னாள் உரிமையாளரான டொனால்ட் ட்ரம்ப்புடன் டேவிலா

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo