பொலிஸ் சோதனையின்போது காற்சட்டைக்குள்ளிருந்து  முதலையை வெளியே எடுத்த பெண்

0 613

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவரை பொலிஸார் சோதனையிட்டபோது,  தனது காற்சட்டைக்குள்ளிருந்து. சிறிய முதலையொன்றை அப்பெண் எடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரிலேயே கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த பெண்ணை பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அவ்வாகனத்திலிருந்து 41 ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதையடுத்து, ‘வேறு ஏதேனும் உங்களிடம் உள்ளனவா?’ என அப்பெண்ணிடம் பொலிஸார் கேட்டனர்.

அப்போது, மேற்படி பெண் எதுவும் பேசாமல் தனது காற்சட்டைக்குள் கையைவிட்டு முதலைக் குட்டியொன்றை வெளியே எடுத்தார் என சார்லட் கவுன்ரி பிரதேச  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்முதலை சுமார் ஒரு அடி நீளமானதாக காணப்பட்டதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர். 

புளோரிடா மாநில மீன்கள் மற்றும் வனஜீவராசிகள் துறை அதிகாரிகள் இது  குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!