அவுஸ்திரேலியாவின் நவீன நாணயத்தாளின் எழுத்துப்பிழை 7 மாதங்களின் பின் கண்டுபிடிப்பு

0 339

அவுஸ்திரேலியாவின் நவீன் நாணயத்தாள் ஒன்றில் ஏற்பட்டிருந்த எழுத்துப் பிழை 7 மாதங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

50 அவுஸ்திரேலிய டொலர் (சுமார் 8,775 ரூபா) நாணயத்தாள் கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இத்தகைய 4.6 கோடி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டன.

அவுஸ்திரேலியாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான எடித் கோவன் 1921 ஆம் ஆண்டு ஆற்றிய தனது கன்னி உரையயின் ஒரு பகுதியும் சிறிய எழுத்துக்களால் அந்த நாணயத்தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

“I stand here today in the unique position of being the first woman in an Australian parliament. It is a great responsibility “’  (அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முதல் பெண் எனும் தனித்துவமான இ;டத்தில் இன்று நான் நிற்கிறேன். இது பெரும் பொறுப்பாகும்) என்ற வசனமே இந்த நாணயத்தாளில்  அச்சிடப்பட்டுள்ளது.

எனினும், responsibility எனும் சொல்லில் i எழுத்து விடுபட்டு responsibilty  என அச்சாகியுள்ளது.

இந்நிலையில், மேற்படி நாணயத்தாளில் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது என்பதை அவுஸ்திரேலிய ரிசர்வர் வங்கி (மத்திய வங்கி) அறிந்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நாணயத்தாள்கள் வாபஸ் பெறப்பட மாட்டாது எனவும்,  அடுத்த தடவை இந்த நாணயத்தாள் அச்சிடப்படும்போது இதிலுள்ள பிழை நீக்கப்படும் எனவும் அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி:

புத்தாக்க நாணயத்தாள் போட்டியில் கனடாவின் 10 டொலர் தாள் முதலிடம்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!