தனது ஆணுறுப்பை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட நபர்

0 223

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், துப்பாக்கியால் தனது ஆணுறுப்பில் தவறுதலாக சுட்டுக்கொண்டுள்ளார்.

நெப்ரஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த பீட்டர் ஜேக்கப்சன் எனும் 32 வயதான இளைஞருக்கே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

இவர் கடந்த முதலாம் திகதி இரவு, லின்கன் நகரிலுள்ள வீதியில் நடந்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது காற்சட்டைப் பொக்கெற்றில் துப்பாக்கியொன்றை வைத்திருந்தார்.

இதன்போது, திடீரென பொக்கெற்றிலிருந்து துப்பாக்கி தவறி வீழ்ந்து. கொங்கிறீட்டில் வீழ்ந்த இத்துப்பாக்கி வெடித்தால், தனது ஆணுறுப்பை குண்டு தாக்கியதாக பொலிஸாரிடம் பீட்டர் ஜேக்கப்சன் தெரிவித்துள்ளார். அதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இக்காயம் உயிராபத்தை ஏற்படுத்தும் அளவில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், நகரில் துப்பாக்கியை வெடிக்க வைத்தமை உட்பட பல குற்றச்சாட்டுகள் பீட்டர் ஜேக்கப்சன் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டுள்ளன.

 

சம்பவம் நடந்த வீதி

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!