தண்ணீரில் இயங்கும் இயந்திரம்: தமிழக பொறியியலாளர் கண்டுபிடிப்பு

0 910

தமிழ்நாட்டைச் சேர்ந்த இயந்திர பொறியியலாளர் ஒருவர் தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் சூழலுக்குப் பாதுக்காப்பான ஒரு இயந்திரத்தைத் தயாரித்துள்ளார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சௌந்திரராஜன் குமாரசாமி என்பவரே இப்பொறியிலாளார் ஆவார்.
இந்த இயந்திரம் ஹைட்ரஜனை (ஐதரசன்) எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஒட்சிசனை வெளிப்படுத்துவதாக இப்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏ.என்.ஐ. செய்திச் சேவைக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இந்த இயந்திரத்தை உருவாக்க எனக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டன. உலகிலேயே, இதுவே இத்தகைய முதல் கண்டுபிடிப்பு. இந்த இயந்திரம் ஐதசனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஒட்சிசனை (ஒக்ஸிஜன்) வெளிப்படுத்தும்.’ ஏனத தெரிவித்துள்ளார்.

இந்த இயந்திரம், இன்னும் சில தினங்களில் ஜப்பானில் அறிமுகமாகப்படுத்தப்படவுள்ளது. இந்தியாவிலும் வெகுவிரவில் அறிமுகமாகும் என நம்புகிறேன் என அவர் கூறினார்.

‘இந்தியாவில் இந்த இயந்திர்ததை அறிமுகப்படுத்துவது எனது கனவு. நிர்வாகிகளின் அனைத்து கதவுகளையும் நான் தட்டினேன். எனக்குச் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனவே நான் ஜப்பானிய அரசாங்கத்தை அணுகினேன். அதையடுத்து எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த இயந்திரம் சில தினங்களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!