இந்தியாவில் ‘மாகாணம்’ ஸ்தாபித்ததாக கூறும் ஐ.எஸ்.

0 402

இந்தியாவில் தமது மாகாணம் ஒன்றை ஸ்தாபித்துள்ளதாக இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதலொன்றின்போது, இறந்த தமது உறுப்பினர் ஒருவர் குறித்த அறிவித்தலில் இந்த மாகாணம் குறித்து முதல் தடவையாக சர்வதேச பயங்கரவாத அபை;பான ஐ.எஸ். தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். அமைப்பின் செய்தி அமாக் செய்தி முகவரகத்தினால் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டது. இம்மாகாணத்தை ‘விலாயாஹா ஒவ் ஹிந்த் (ஹிந்த் விலாயா) என அவ்வமைப்பு பெயரிட்டுள்ளது.

காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தின் அம்ஷிபோரா நகரில் நடந்த மேற்படி மோதலில் இந்திய படையினருக்கு இழப்புகள் ஏற்பட்டதாகவும் அமாக் தெரிவித்துள்ளது.

ஷோபியான் மாவட்டத்தில் நடந்த மோதலில் இஷாக் அஹ்மட் சோஃபி எனும் தீவிரவாதி இறந்ததாக இந்திய பொலிஸார் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் தாம் ஸ்தாபித்ததாகக் கூறும் கலீபா இராஜ்ஜியப் பகுதியிலிருந்து விரட்டப்பட்ட ஐ.எஸ். அமைப்புக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் இந்த மாகாணம் ஸ்தாபிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் நடவடிக்கைகளை அவதானித்து வரும் SITE அமைப்பின் பணிப்பாளர் ரீட்டா கட்ஸ் இது தொடர்பாக கூறுகையில், “தனது நிர்வாகம் இல்லாத பிராந்தியமொன்றில் மாகாணம் ஒன்றை ஸ்தாபித்ததாக்க கூறுவது அபத்தமானது. ஆனால் இவ்விடயத்தை முற்றாக புறந்தள்ளிவிட முடியாது”எனக் கூறியுள்ளார்.

“இவ்விடயம் குறித்து உலகம் வியப்படையக்கூடும். ஆனால், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய இப்பிராந்தியத்தில், தமது கலீபா இராஜ்ஜய வரைபடைத்தை மீளக் கட்டியெழுப்புதற்கு, குறிப்பிடத்தக்க களச் செயற்பாடுகளை மேற்கொள்ள அவர்களுக்கு இது உதவக்கூடும்” என ரீட்டா கட்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo