சேர்கஸ் கலைஞரை கழுத்து நெரித்துக் கொன்ற பாம்பு (வீடியோ))

0 597

சேர்கஸ் மேடையில் பாரிய பாம்பை தனது கழுத்தில் சுற்­றிக்­கொண்­டி­ருந்த சேர்கஸ் கலைஞர் ஒருவர், அப்­பாம்­பினால் கழுத்து நெரித்து கொல்­லப்­பட்ட சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோ­வொன்றும் இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. சிறார்கள் உட்­பட பெரும் எண்­ணிக்­கை­யானோர் சேர்கஸ் நிகழ்ச்­சியை பார்த்­துக்­கொண்­டி­ருந்த நிலை யில் இந்த அதிர்ச்சி சம்­பவம் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாரிய மலைப்­பாம்பை மேற்­படி சேர்க்கஸ் கலைஞர் தனது கழுத்தில் சுற்­றிக்­கொண்டு சாக­சத்தில் ஈடு­பட முன்றார்.
பாம்­புடன் நடந்­து­கொண்­டி­ருந்த அவர், திடீ­ரென சரிந்து வீழ்ந்தார்.

அவர் தனது கையை தரையில் அடித்து சமிக்ஞை ஏற்­ப­டுத்த முயன்­ற­போ­திலும், அவ­ருக்கு ஏற்­பட்ட ஆபத்தை உட­ன­டி­யாக எவரும் உண­ர­ வில்லை.

சிறிது நேரத்தின் பின் அவர் அசை­வற்று இருந்­ததால் இருவர் ஓடி­வந்து, மேற்­படி சேர்கஸ் கலை­ஞரின் கழுத்­தி­லி­ருந்து பாம்பை அப்புறப்படுத்தினர்.

எனினும், அக்கலைஞரை காப் பாற்ற முடியவில்லை.

 

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!