100 ஆவது பிறந்த தினத்தையொட்டி கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்ற கானா பிரதம இமாம்

0 449

கானா நாட்டின் பிரதம இமாம், தனது 100 ஆவது பிறந்த தினத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த பூஜையில் பங்குபற்றினார்.

ஷேக் ஒஸ்மான் ஷருபுது, கானா நாட்டின் பிரதம இமாமாக விளங்குகிறார். சமாதானம், சகவாழ்வுக்காக பாடுபடும் மதத் தலைவராக பெயர் பெற்றவர் இவர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி அவருக்கு 100 வயது பூர்த்தியடைந்தது. இதனை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த பூஜையில் பங்குபற்றினார்.

அருட் தந்தை அன்ட்ரூ கெம்பல் சகிதம் இமாம் ஷேக் ஒஸ்மான் ஷருபுது காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இமாம் ஷேக் ஒஸ்மான் ஷருபுது நடவடிக்கையை,  இருளில் மின்னும் ஒளி என பலர் வர்ணித்துள்ளனர். எனினும் வேறு சிலர் அவரை விமர்சித்துள்ளனர்.

ஆனால், தான் கிறிஸ்தவ தேவாலயத்தில் வழிபாடு செய்யவில்லை எனவும், முஸ்லிம்களுககும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவை சகிப்புத்தன்மை என்ற நிலையிலிருந்து பரஸ்பரம் பழகும் நிலைக்கு தான் முன்னேற்றுவதாகவும் கானா பிரதம இமாம் ஷேக் ஒஸ்மான் ஷருபுது தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo