வரலாற்றில் இன்று மே 10 : 1997 ஈரானில் பூகம்­பத்­தினால் 1,567 பேர் பலி

0 87

1503 : கிறிஸ்­ரோபர் கொலம்பஸ் கேமான் தீவு­களை அடைந்து அங்­கி­ருந்த பெருந்­தொ­கை­யான கட­லா­மை­களைக் கண்டு அத்­தீ­வுக்கு லாஸ் டோர்ட்­டுகஸ் எனப் பெய­ரிட்டார்.

1612 : இந்­தி­யாவின் ஷாஜகான் மன்னர்; மும்தாஜ் மஹாலைத் திரு­மணம் புரிந்தார்.

1774 : பதி­னாறாம் லூயி பிரான்ஸின் மன்­ன­னாக முடி­சூ­டினார்.

1796 : பிரான்ஸ் மன்னன் நெப்­போ­லியன் போனபார்ட் இத்­தா­லியில் ஆஸ்­தி­ரியப் படை­க­ளுக்­கெ­தி­ரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்­தி­ரி­யர்கள் வரையில் கொல்­லப்­பட்­டனர்.

1810 : ஆர்­ஜென்­டீ­னாவின் தலை­ந­க­ரான புவனஸ் அயர்ஸ் நகர மண்­ட­பத்தை புரட்­சி­யா­ளர்கள் கைப்­பற்­றினர்.

1857 :இந்­தி­யாவில் உத்­தரப் பிர­தே­சத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்­பாய்கள் பிரித்­தா­னியக் கிழக்­கிந்­தியக் கம்­ப­னிக்கு எதி­ராக கிளர்ச்­சியை ஆரம்­பித்­தார்கள். இந்­திய விடு­தலைப் போராட்டம் ஆரம்­ப­மா­னது.

1865 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர் அமெ­ரிக்க மாநி­லங்­களின் கூட்­ட­மைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெ­ரிக்கக் கூட்டுப் படை­க­ளினால் ஜோர்­ஜி­யாவில் கைப்­பற்­றப்­பட்டார்.

1865 : அமெ­ரிக்க உள்­நாட்டுப் போர் அமெ­ரிக்கக் கூட்டுப் படைகள் அமெ­ரிக்க மாநி­லங்­களின் கூட்­ட­மைப்பின் தள­ப­தி­யான வில்­லியம் குவாண்ட்ரில் என்­ப­வரை கென்­டக்கி என்ற இடத்தில் தாக்கி படு­கா­யப்­ப­டுத்­தினர். இவர் ஜூன் 6 இல் இறந்தார்.

1877 : ருமே­னியா, துருக்­கி­யிடம் இருந்து விடு­த­லையை அறி­வித்­தது.

1908 : அன்­னையர் நாள் முதன் முதலில் அமெ­ரிக்­காவில் மேற்கு வேர்­ஜி­னி­யாவில் கொண்­டா­டப்­பட்­டது.

1940 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னியின் முத­லா­வது குண்டு இங்­கி­லாந்தில் கெண்ட் பகு­தியில் வீழ்ந்­தது.

1940 : இரண்டாம் உலகப் போர்: பெல்­ஜியம், நெதர்­லாந்து, லக்­ஸம்பேர்க் ஆகிய நாடு­க­ளுக்குள் ஜேர்­மனி ஊடு­ரு­வி­யது.

1940 : வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்­கிய இராச்­சி­யத்தின் பிர­த­ம­ரானார்.

1940 : இரண்டாம் உலகப் போர்: ஐக்­கிய இராச்­சியம் ஐஸ்­லாந்­தினுள் ஊடு­ரு­வி­யது.

1941 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னியின் வான்­ப­டையின் தாக்­கு­தலால் லண்­டனில் கீழவை நாடா­ளு­மன்றம் (House of Commons) சேதத்­துக்­குள்­ளா­கி­யது.

1946 : ஜவ­ஹர்லால் நேரு இந்­திய தேசியக் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வ­ரானர்.

1979 : மைக்­கு­ரே­னே­சிய கூட்­டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்­றன.

1993 : தாய்­லாந்தில் விளை­யாட்டுப் பொருட்கள் தயா­ரிக்கும் தொழிற்­சா­லையில் இடம்­பெற்ற தீ விபத்தில் பெரும்­பான்­மை­யான இளம் பெண்கள் உள்ள 188 தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1994 : நெல்சன் மண்­டேலா தென் ஆபி­ரிக்­காவின் முத­லா­வது கறுப்­பினத் தலை­வ­ரானார்.

1996 : எவரெஸ்ட் சிக­ரத்தில் இடம்­பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலை­யே­றிகள் கொல்­லப்­பட்­டனர்.

1997 : உயி­ரி­ழந்­த­துடன், சுமார் 2,300 பேர் காய­ம­டைந்­தனர்.

2001 : கானாவில் கால்­பந்­தாட்டப் போட்டி ஒன்றில் இடம்­பெற்ற நெரி­சலில் சிக்கி 120 பார்­வை­யா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

2005: ஜோர்­ஜி­யாவில் அந்­நாட்டு ஜனா­தி­பதி மிக்கெய்ல் சாகஷ்­விலி, அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷும் கலந்­து­கொண்ட நிகழ்ச்­சி­யொன்றில் நபர் ஒருவர் வீசிய கிறனெட், தலை­வர்கள் அமர்ந்­தி­ருந்த மேடைக்கு 18.6 மீற்றர் (61அடி) தூரத்தில் வீழ்ந்­தது. எனினும், அது வெடிக்­க­வில்லை.

2012: சிரி­யாவின் டமஸ்கஸ் நகரில் நடந்த தற்­கொலைத் தாக்­கு­தலில் 44 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் சுமார் 400 பேர் காயமடைந்தனர்.

2013: செப்டெம்பர் 11 தாக்குதலில் அழிக்கப்பட்ட உலக வர்த்தக மையத்துக்குப் பதிலாக நிர்மாணிக்கப்பட்ட வன் வேர்ல்ட் ட்ரேட் சென்ரர் கட்டடம் உலகின் மேற்கு அரைக்கோளத்தின் மிக உயரமான (1776 அடி 541 மீற்றர்) கட்டடமாகியது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo