வரலாற்றில் இன்று மே 13: 1981-துப்பாக்கிப் பிரயோகத்தில் பாப்பரசர் காயமடைந்தார்

0 229

1648: இந்­தி­யாவில் மன்னன் ஷாஜ­ஹானின் ஆட்­சிக்­கா­லத்தில் டில்லி நகரில் செங்­கோட்டை நிர்­மாணம் பூர்த்தியா­கி­யது.

1787: அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யேற்றம் அமைப்­ப­தற்­காக குற்­ற­வா­ளிகள் நிறைந்த 11 கப்­பல்­க­ளுடன் பிரித்­தா­னிய தள­பதி ஆர்தர் பிலிப் இங்­கி­லாந்­தி­லி­ருந்து புறப்­பட்டார்.

1846: மெக்­ஸிகோ மீது அமெரிக்கா யுத்தப் பிர­க­டனம் செய்­தது.

1861: பிரித்­தா­னிய ஆட்­சிக்­குட்­பட்ட இந்­தி­யாவின் ஒரு பகு­தி­யாக இருந்த பாகிஸ்­தானில் முத­லா­வது ரயில் பாதை நிர்­மா­ணிக்­கப்­பட்­டது.

1917: போர்த்­துக்­கலில் பற்­றிமா மாதாவை நேரில் கண்­ட­தாக 3 சிறார்கள் அறி­வித்­தனர்.

1939: முத­லா­வது வர்த்­தக எவ்.எம். வானொலி நிலையம் அமெ­ரிக்­காவின் கனக்­டிகட் மாநி­லத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1940: பிரான்ஸ் மீதான ஜேர்­ம­னியின் ஆக்­கி­ர­மிப்பு ஆரம்­ப­மா­னது.

1940: ஜேர்மன் படை­க­ளுக்கு அஞ்சி, நெதர்­லாந்து அரசி வில்­ஹெல்­மினா பிரிட்­ட­னுக்குத் தப்பிச் சென்றார்.

1950: முத­லா­வது போர்­மியூலா வன் மோட்டார் பந்­தயப் போட்டி பிரிட்­டனின் சில்வர் ஸ்டோன் நகரில் நடை­பெற்­றது.

1958: அமெ­ரிக்க உப ஜனா­தி­பதி ரிச்சர்ட் நிக்ஸன் வெனி­சூ­லா­வுக்கு விஜயம் மேற்­கொண்­ட­போது, அவரின் கார் அமெ­ரிக்க எதிர்ப்­பா­ளர்­களால் தாக்­கப்­பட்­டது.

1958: பென் கார்லின் என்­பவர், நிலத்­திலும் நீரிலும் பயணம் செய்­யக்­கூ­டிய வாக­னத்தின் மூலம் உலகை சுற்­றி­வரும் பய­ணத்தை பூர்த்தி செய்தார். இப்­ப­ய­ணத்­துக்கு 10 வரு­ட­காலம் சென்­றது. இச்­சா­த­னையை புரிந்த ஒரே நபர் இவ­ராவார்.

1969: மலே­ஷி­யாவின் கோலா­லம்பூர் நகரில் சீன, மலாய் இனத்­த­வர்­க­ளி­டையே பாரிய வன்­முறை மூண்­டது.

1972: ஜப்­பானின் ஒசாகா நகரில் மின்­னொ­ழுக்கு கார­ண­மாக ஏற்­பட்ட தீயினால் 118 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1981: ரோம் நகரில் பாப்­ப­ரசர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரை கொல்லும் நோக்­குடன் துருக்­கியை சேர்ந்த மெஹ்மத் அலி என்­பவர் பாப்­ப­ர­சரை துப்­பாக்­கியால் சுட்டார். இதனால் காய­ம­டைந்த பாப்­ப­ர­ச­ருக்கு அவ­சர சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்­டது.

1989: சீனாவின் திய­னமென் சதுக்­கத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான மாண­வர்கள் உண்­ணா­வி­ரதப் போராட்டம் மேற்­கொள்ள ஆரம்­பித்­தனர்.

1995: ஒட்­சிசன் வாயுவை கொண்­டு­செல்­லாமல், எவரெஸ்ட் சிக­ரத்தை அடைந்த முதல் பெண் எனும் சாத­னையை பிரிட்­டனைச் சேர்ந்த 33 வய­தான அலிஸன் ஹார்­கிறேவ்ஸ் என்­பவர் படைத்தார்.

1998: இந்­தோ­னே­ஷி­யாவில் சீன இனத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக பாரிய வன்­மு­றைகள் இடம்­பெற்­றன.

1998: பொக்ரான் எனும் இடத்தில் இந்­தியா மேலும் அணு­குண்டு சோத­னை­களை நடத்­தி­யது. (1998 மே 11 ஆம் திக­தியும் 3 அணு­குண்டு சோத­னை­களை இந்­தியா நடத்­தி­யி­ருந்­தது). ஜப்­பானும் அமெ­ரிக்­காவும் இந்­தி­யா­வுக்கு எதி­ராக பொரு­ளா­தார தடை­களை விதித்­தன.

2000: நெதர்­லாந்தில் பட்­டாசு தொழிற்­சா­லையில் இடம்­பெற்ற விபத்தில் 22 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2006: பிரேஸில் சிறைச்­சா­லை­களில் பாரிய வன்­மு­றைகள் ஏற்­பட்­டன.

2008: இந்­தி­யாவின் ஜெய்பூர் நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பு­களில் பலர் உயி­ரி­ழந்­தனர்.

2011: பாகிஸ்­தானின் சர்­ஸடா நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பு­களில் 98 பேர் உயி­ரி­ழந்­தனர், 148 பேர் காய­ம­டைந்­தனர்.

2014: ஐரோப்­பாவில் வெள்­ளத்தால் 47 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2015: புங்குடுதீவில் மாணவி வித்தியா கொல்லப்பட்டார்.

2015: பிலிப்பைன்ஸின் வெலேன்சுவேலா நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர்.

2018: இந்தோனேஷியாவின் சுரபாயா நகரில் 3 தேவாலயங்களில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் 57 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo