லண்டன் போட்டியின்போது ரெஸ்லிங் வீரர் மரணம்! (வீடியோ)

0 743

தொழிற்சார் மல்யுத்த (ரெஸ்லிங்) வீரர் சீசர் பரோன், லண்டனில் நடந்த மல்யுத்தப் போட்டியொன்றின்போது உயிரிழந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் யூத் வொரியர் எனும் ஜுவென்டட் குரேராவுடன் சீசர் பரோன் மோதிக்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

51 வயதான சீசர் பரோன், சில்வர் கிங் என அறியப்பட்டவர். அமெரிக்காவின் வேர்ல்ட் சம்பியன்ஷிப் ரெஸ்லிங் (WCW) போட்டிகளிலும் பங்குபற்றியவர்.

தனது சொந்த நாடான மெக்ஸிகோவில் அவர் ஒரு நட்சத்திரமாக விளங்கினார் சீசர் பரோன். 2005 ஆம் ஆண்டு வெளியான நச்சோ லிப்ரே எனும் திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்தமை குறிப்பிடத்தக்கது.

மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் எனக் கருதப்படுவதாக மெக்ஸிகோ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போட்டியின்போது சீசர் பரோன், வீழ்ந்து கிடந்த நிலையில், அது ஒரு ‘நடிப்பு’ என்றே பலர் கருதினர்.

அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அறியாத ஜுவென்டட் குவேரெரா போட்டியை தொடர்ந்து கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தின்பின் ஏனைய போடடியாளர்கள் அவரின் உதவிக்கு வந்து அவரை எழுப்ப முயன்றனர். அதன் பின்னர் நிலைமை புரிந்தவுடன் பலரும் அதிர்ச்சியடைந்தனர். 

வீடியோ: 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo