இலங்கைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து சென்னை பொலிஸாருக்கு தினமும் வரும் விஷமத்தனமான தொலைபேசி அழைப்புக்கள்!

தாங்கள் குண்டுவைத்ததாக மனைவியுடனான தகராறு காரணமாகவும் சிலர் கூறுகிறார்களாம்

0 261

இலங்­கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து அந்தத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் பற்றித் தங்­க­ளுக்குத் தெரி­யு­மென்று கூறி, பல பேர்­வ­ழிகள் சென்­னையில் பொலி­ஸா­ரை ஏமாற்றும் நோக்கில் தொலை­பேசி அழைப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக ‘தி இந்து” பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

இலங்கைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கு தானே பொறுப்பு என்று உரி­மை­கோரி சென்­னை­யி­லுள்ள பொலிஸ் கட்­டுப்­பாட்டு அறைக்கு தொலை­பே­சியில் பேசிய 40 வயது நப­ரொ­ரு­வரை இரு வாரங்­க­ளுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்­தனர்.

அந்த நபர் மனை­வி­யு­ட­னான பிரச்­சி­னையைத் தொடர்ந்தே இவ்­வாறு தொலை­பேசி அழைப்பை மேற்­கொண்­டி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

அதே­வேளை, இலங்கை அக­திகள் பொள்­ளாச்சி ரயில் நிலை­யத்தில் குண்­டொன்றை வைப்­ப­தற்குத் திட்டம் தீட்­டு­வ­தாக கோயம்­புத்­தூரில் கிரா­மப்­ப­குதி பொலி­ஸா­ருக்குப் போலித் தக­வலை வழங்­கிய 53 வயது நப­ரொ­ரு­வரும் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். அந்த நபர் தனது நண்­ப­ரொ­ரு­வரைப் பழி­வாங்கும் நோக்­கி­லேயே இவ்­வாறு தொலை­பே­சியில் பேசி­ய­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

தமி­ழ­கத்தின் ஏனைய பகு­தி­க­ளி­லி­ருந்தும் பொலி­ஸா­ருக்கு இத்­த­கைய ஏமாற்­றுத்­த­ன­மான அழைப்­புக்கள் தொடர்ச்­சி­யாக வரு­வ­தாக அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளார்கள்.’தினமும் 500 முதல் 600 வரை­யான அழைப்­புக்கள் பொலிஸ் கட்­டுப்­பாட்டு அறைக்கு வரு­கின்­றன. ஒவ்­வொரு மாதமும் 12 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான தொலை­பேசி அழைப்­புக்கள் வரு­கின்­றன.

ஆனால் இலங்கைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பிறகு விஷ­மத்­த­ன­மான தொலை­பேசி அழைப்­புக்கள் சடுதியாக அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. தங்­க­ளது மனை­வி­மாரை அல்­லது நண்­பர்­களைப் பழி­வாங்­கு­வ­தற்­கா­கவும் சிலர் இவ்­வா­றான தொலை­பேசி அழைப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­கி­றார்கள்.

அர­சாங்­கத்­திற்கு எதி­ரான தங்­க­ளது கோபத்தை வெளிப்­ப­டுத்த விரும்­பு­கின்ற குடி­கா­ரர்­க­ளி­ட­மி­ருந்தும் சில அழைப்­புக்கள் வரு­கின்­றன. நாங்கள் இந்தத் தொலை­பேசி அழைப்­புக்கள் எங்­கி­ருந்து வரு­கின்­றன என்­பதைக் கண்­ட­றிவோம். ஆனால் விசா­ர­ணைக்குப் பிறகு தான் அவை விஷ­மத்­த­ன­மா­னவை என்று உறு­திப்­ப­டுத்திக் கொள்­கிறோம்” என்று உதவி பொலிஸ் ஆணை­யா­ள­ரான கே.ஆனந்த் குமார் “தி இந்து” பத்­தி­ரி­கைக்குத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இவ்­வா­றாக விஷ­மத்­த­ன­மான தொலை­பேசி அழைப்­புக்­களை எடுக்க வேண்­டா­மென்று பொலிஸார் பொது­மக்­களை எச்­ச­ரிக்கை செய்­தி­ருக்­கி­றார்கள். இதனை மீறிச்செய்தால் இந்தியத் தண்டனைச் சட்டக்கோவையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும். இத்தகைய அழைப்புக்கள் பெருமளவான மனிதசக்தியை விரயமாக்குகின்றன என்றும் ஆனந்த் குமார் கூறியதாக “தி இந்து” பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo