புர்கினா பெசோவில் தேவாயம் மீது தாக்குதல்: அருட்தந்தை உட்பட 6 பேர் பலி

0 107

ஆபிரிக்க நாடான புர்கினா பெசோவில் தேவாலயமொன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

டப்லோ நகரிலுள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றில் நேற்று காலை பூஜை நடந்துகொண்டிருந்தபோது சுமார் 20 – 30 பேர் கொண்ட குழுவொன்று தாக்குதல் நடத்தயதாக தெரிவிக்கப்படுகிறது.

“இத்தாக்குதலில் அருட் தந்தையொருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். தேவாலயத்தை தீவிரவாதிகள் தீக்கிரையாக்கினர்.

தேவாலயம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அருகிலுள்ள கடைகள், மற்றும் மருத்துவத் தாதியொருவரின் வாகனத்தையும் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கினர்” என டப்லோ நகர மேயர் அவுஸ்மேன் ஸாங்கோ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo