ஜேர்மன் ஹோட்டல் அறையில் அம்பு பாய்ந்த 3 சடலங்கள்

Three bodies found with crossbow bolts in German hotel

0 573

ஜேர்மனியின் ஹோட்டல் அறையொன்றில், அம்புகள் தாக்கப்பட்ட மூவரின் சடலங்கள் குறித்து அந்நாட்டுப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

50 வயதான ஆண் ஒருவரும், 30 மற்றும் 33 வயதான இரு யுவதிகளின் சடலங்களுமே அம்பு பாய்ந்த நிலையில் ஹோட்டல் ஊழியர்களால் நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

மேற்படி மூவருக்கும் இடையிலான உறவு முறை என்னவென்பது தெரியவில்லை. குறித்த ஹோட்டல் அறையில் இரு வில்லுகளும் காணப்பட்டன. உயிரிழந்த மூவரும் ஜேர்மனியப் பிரஜைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற ஹோட்டல்


 

ஆஸ்திரியாவுடனான எல்லையிலுள்ள பசோ நகரிலுள்ள ஹோட்டலொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மரணங்களில் மற்றொருவர் சம்பந்தப்பட்டமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை என ஜேர்மனியின் டீ.பி.ஏ. செய்தி முகவரம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo