சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து: கமல் தெரிவிப்பு

0 204

‘சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து’ என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது தெரிவித்துள்ளார். 

“இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது அது. 

நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன், அப்படி நினைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன்” என கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo